சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி... என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன நடக்கும். உண்மையில் அந்த பெண்களை நினைத்து பயம் வருகிறது. ஒருவேளை அதுபற்றி நான் பேசினால் டீப்பேக் என்றால் என்ன?, அது சரியானதா, என குறைந்தபட்சம் மக்களையாவது சென்றடையும். அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்'' என்கிறார்.