வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50 படங்களை தாண்டி நடித்து வருகிறார் ஹன்சிகா. கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து படங்களில் பிஸியாக அரை டஜன் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் தென்னிந்திய சினிமா நடிகை என்பதால் ஆடை வடிவமைப்பாளர்கள் புறக்கணித்தனர் என கூறியுள்ளார்.
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் நடித்து வந்ததால் பாலிவுட்டில் சில ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகள் வழங்க முன்வரவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவர்களே ஏன் நீங்கள் எங்களது ஆடையை அணியக் கூடாது என கேட்டனர். நான் மறுக்கவில்லை, ஒப்புக் கொண்டேன். காரணம் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் இந்திய நடிகை, இந்திய சினிமாவில் நடிக்கிறேன் என்று தான் எப்போதும் கூறுவேன்'' என்கிறார்.