இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. அடா சர்மா, சித்தி இட்னானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கேரளாவில் பெண்களை மதம் மாற்றம் செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்துவிடுவது மாதிரியான கதைகளத்தில் வெளியானது. இந்த படத்திற்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் உலகமெங்கும் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதீப்டோ சென் தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின்' பயோபிக் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு 'சஹாராஸ்ரீ' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அறிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்குகிறது. ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.