எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். துருதுருவென பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் இவரது உடல்வாகு சினிமாவில் அவருக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளது.
அடுத்தடுத்து படங்கள் வெளியாக காத்திருக்கும் இவர் கூறியதாவது...
நான் விஸ்காம் மாணவன். பிறந்து வளர்ந்தது சென்னை. படிக்கும் போதே நாடகம், நடிப்பில் ஈடுபாட்டோடு இருந்தேன். கல்லுாரி நாட்களிலே டிராமா கிளப்பில் தலைமை பொறுப்பில் இருந்தேன். நாடகங்களை இயக்கி, நடித்து வந்தேன்.
கல்லுாரி 2ம் ஆண்டு படிக்கும் போதே யுடியூப் சேனலில் பகுதி நேரமாக பணிபுரிந்தேன். கல்லுாரி முடிந்த பின் அதே சேனலில் முழு நேரமாக ஸ்கிரிப்ட் எழுதவும், திரைப்பட விமர்சனம் செய்யவும் துவங்கினேன்.
நடிப்பதற்கு வாய்ப்பு தேடி ஆடிஷன்கள் சென்றேன். ஒரு நாள் இயக்குனர் கவுதம் மேனன், அறிமுக இயக்குனரின் படத்திற்காக ஆட்கள் தேடுவதாக பதிவிட்டிருந்தார். அந்த ஆடிஷனில் தேர்வாகினேன். அதுதான் இசை அமைப்பாளராக இருந்து இயக்குனரான தர்புகா சிவாவின் 'முதல் நீ முடிவும் நீ' படம்.
2018 ஆகஸ்டில் 13 பேர் குழுவாக திரைப்படத்திற்காக பணிபுரிந்தோம். தயாரிப்பாளர் மாறினார். தர்புகா சிவாவின் விடாமுயற்சியில் வேறு தயாரிப்பாளர் மூலம் படம் துவங்கினோம். 2019ல் துவங்கி அதே ஆண்டு டிசம்பரில் ஷூட்டிங் முடித்தோம். பின் கொரோனா வந்ததால் டப்பிங் பணிகள் முடியவில்லை.
என் வீட்டிற்கு பொருளாதார ரீதியாக உதவ டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் ஓராண்டு பணி புரிந்தேன். கிடைக்கும் நேரங்களில் டப்பிங் செய்து படத்தை முடித்தோம். 2021 டிசம்பரில் ஓடிடிக்கு ஒப்பந்தமானது. 2022ல் ஜனவரி மாதம் திரைப்படம் வெளியாகி பலரது வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதலை நினைவுப்படுத்தும் கதை பலரையும் ஈர்த்தது.
படத்தில் இடம்பெற்ற 'முதல் நீ முடிவும் நீ' பாடல் வரவேற்பை பெற்றது. எங்கே நான் சென்றாலும் அந்த பாடலை வைத்து தான் என்னை அடையாளம் கண்டு பலர் பேச வருகின்றனர்.
அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் வர துவங்கின. ஆர்ஜே பாலாஜியுடன் நடித்துள்ள 'சிங்கப்பூர் சலுான்' திரைப்படம் ஜூலையில் வெளியாக உள்ளது.
படம் வெளியாகாத நேரங்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தேன். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அம்மா பிருந்தா தாஸ், சீரியல் நடிகை தான் என்றாலும் அவர் பெயரை நான் எங்கேயும் பயன்படுத்துவதே கிடையாது. என்னுடைய பயணம் என்னுடையதாக இருக்க வேண்டும்.
சினிமாவுக்கு வர விரும்புபவர்கள் முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும். ஐ.டி.,ல் பணிபுரியும் பலர் இன்று யுடியூப் கிரியேட்டர்களாக உள்ளனர். அங்கே இருந்து துவங்கி சினிமாவுக்குள் வர பல வழிகள் உள்ளன. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
எல்லோருக்கும் கதவு திறக்கும். அதுவரை காத்திருங்கள் என்றார்.