''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சோலைப்பசுங்கிளியே... உன்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட தென்றல்... மீனம்மா... மீனம்மா... என்ற சினிமா பாடல்களை கேட்காதவர்கள் இருக்க முடியாது. காதுகளில் தேன்பாய்ச்சிய வரிகளுக்கு சொந்தக்காரர் மறைந்த கவிஞர் பிறைசூடன். அவரது பெயரை காப்பாற்றும் அளவுக்கு இளம் இசையமைப்பாளராக உருவாகிக் கொண்டிருக்கிறார் மகன் தயா பிறைசூடன்.
அவர் மனம் திறந்தது...
என்னை இசையமைப்பாளராக உருவாக்க அப்பாவுக்கு ஆசை இருந்தது. 'உனக்கு என்ன மியூசிக் தெரியும்' என என்னிடம் கேட்ட அப்பா, இசை ஆர்வத்தை புரிந்து ஊக்கமளித்தார். நானும் பள்ளி, கல்லுாரியில் குறும்படத்திற்கு இசை அமைப்பது துவங்கி இசைத் திறனை வளர்ந்து கொண்டேன். பாடத் தெரிந்தால்தான் 'கம்போசிங்' பண்ணுவது எளிதாக இருக்கும். பாடல்களை அதன் மெட்டோடு பீலிங்கையும் கொண்டு வர முடியும். என்ன மாதிரியான காட்சிகளுக்கு, எந்த மெட்டுடன் எப்படி பாட வேண்டும் என பாடகர்களுக்கு கற்றுத் தர முடியும். எனக்கு கம்போசிங் மீதுதான் அலாதி ஆர்வம்.
அப்பாவை போல ஏன் பாடலாசிரியராக வரவில்லை என சிலர் கேட்கின்றனர். ஓய்வும், வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைக்கும் போது பாடல்கள் எழுதுவது உண்டு. இளம் தலைமுறையினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க விரும்புகிறேன். இதுவரை கம்போசிங் செய்ததில் சிறந்தது என குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. இன்னமும் நன்றாக செய்திருக்கலாம்; இன்னும் இசைக் கருவிகளை நிறைய பயன்படுத்தி இருக்கலாம்; என்றே தோன்றும். ஒவ்வொரு நேரத்திற்கும் ரசனை மாறுபடும். இதுவரை செய்ததை விட இனி சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
எனது கம்போசிங்கில் திருவண்ணாமலை அண்ணாமலையார் குறித்த ஒரு பாடல் அண்ணாமலை கண்டு மலைத்தேன் என்ற பாடல், மெலடி பாடல்கள் அப்பாவுக்கு பிடிக்கும். கடைசி காலத்தில் அண்ணாமலை பாடலை தினமும் பல முறை கேட்டு ரசித்தார். இதுவரை 10 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். இரண்டு தெய்வீக பாடல்கள் ஆல்பம் செய்து இருக்கேன். தற்போது 2 படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு எமோஷன் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்கிறது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கு.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் இசையில் பாட வேண்டும் என விரும்பினேன். நிறைவேறாமல் போனது. ஹரிஹரன், சோனு நிகாம் போன்றோரை பாட வைக்கும் விருப்பம் இருக்கிறது என்றார்.