பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் |
தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் இலியானா. இன்னும் திருமணம் செய்யாமல் உள்ள இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார் என்பதை அறிவிக்கவில்லை. இதன் காரணமாக இலியானாவின் கர்ப்பம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது தனது காதலருடன் தான் இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இலியானா, தனக்கு பிறக்கப் போகும் குழந்தை மற்றும் காதலர் குறித்தும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதேசமயம் அவரின் போட்டோ தெளிவாக இல்லை. அந்த நபர் யார் என்பதையும் அவர் குறிப்பிடாமல் அவரை பற்றி உருகி உருகி நெகிழ்ந்துள்ளார் இலியானா.
தனது காதலர் குறித்து கூறுகையில், இந்த மனிதர் எனக்கு மிகவும் துணையாக நின்றார். நான் மனசு உடைந்து நின்ற போதெல்லாம் என்னை தாங்கி நின்றார் . என்னுடைய கண்ணீரைத் துடைத்தார். தேவையான பொழுது கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார். இனிமேல் எதுவுமே கடினமாக இருக்காது என்று கூறினார். அவர் சொன்ன வார்த்தைகள் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் அமைந்தன என்று பதிவிட்டுள்ளார் நடிகை இலியானா.
அதில், கர்ப்பமாக இருப்பதே ஒரு அழகான ஆசீர்வாதம். நான் இத்தனை பாக்கியசாலி என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனக்குள் ஒரு உயிர் வளர்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உன்னை விரைவில் சந்திப்பேன் . அடுத்து வரப் போகும் சில நாட்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கப்போகிறது. கண்ணீர் மற்றும் குற்ற உணர்வு என நடப்பவை நம்பிக்கை அற்றவையாக உள்ளது. நான் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் எந்த மாதிரியான அம்மாவாக இருப்பேன் எனக்கு அது உண்மையாகவே தெரியவில்லை. நான் இந்த சிறிய உயிரை மிகவும் நேசிக்கிறேன். இதுவே எனக்கு போதுமானது என்று பிறக்கப் போகும் குழந்தை குறித்து பதிவிட்டுள்ளார் இலியானா.