திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'விடுதலை' படம் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வெளியானது. முதலில் ஒரே பாகமாக மட்டுமே படம் வெளியாவதாக சொல்லப்பட்டது. அதன்பின் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார்கள். அதன்படி முதல் பாகம் வெளியானது. முதல் பாகம் படப்பிடிப்பு நடக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால், இப்போது இரண்டாம் பாகத்திற்காக சில மாற்றங்களைச் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி வருவதாகத் தகவல் வந்துள்ளது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் இயக்குனர் வெற்றிமாறன். அதனடிப்படையில் புதிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம். அதற்காக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேதிகளை வாங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என இயக்குனர் தரப்பில் சொல்லப்பட்டு இப்போது நாற்பது நாள் வரை படப்பிடிப்பு நடத்தக் கேட்டுள்ளார்களாம்.
முதல் பாகத்திற்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இரண்டாம் பாகத்திற்கான கூடுதல் செலவுகளுக்கு தயாரிப்பாளர் தடை சொல்லவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.