தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'தங்கலான்'. தொடர்ந்து நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக நடைபெறவில்லை. படத்திற்காக பயிற்சி பெற்ற போது விக்ரமிற்கு விலா எலும்பில் காயமேற்பட்டு அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அவரது காயம் தற்போது சீராகிவிட்டதால் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்க படக்குழு தயாராகி வருகிறதாம்.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரங்கில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. ஒரு பீரியட் படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியின் முதல் படம், தனது கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யும் விக்ரம் என எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது படம். இந்த வருடம் வெளியாக உள்ள படங்களில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்திலும் தெரிவிக்கிறார்கள்.