நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்மிருதி வெங்கட். 'தடம்' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டில் மட்டும் மாறன், மன்மதலீலை, குற்றம் குற்றமே, தேஜாவு படங்களில் நடித்தார். தற்போது அவர் 'தேஜாவு' இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் மீண்டும் இணைந்து 'தருணம்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ஜோடியாக 'முதலும் நீ முடிவும் நீ' படத்தில் நடித்த கிஷன் தாஸ் நடிக்கிறார். இவர் ஸ்மிருதி வெங்கட்டை விட ஒரு சில வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், தர்புகா சிவா இசை அமைக்கிறார்.
“இந்த படம் மெச்சூர்டான ஒரு காதல் கதை. இந்த படத்தில் 60 காட்சிகள் என்றால் அதில் ஒரு காட்சியைகூட முந்தைய எந்த படத்திலும் பார்த்திராத காட்சியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். படத்தை ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ், மற்றும் ஈடன் தயாரிக்கிறார்கள்.