பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
தமிழில் 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின் தமிழில் சில படங்கள் நடித்தாலும் தெலுங்கில் 'பொம்மரிலு' படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்று அங்கும் பிரபலமானார். அந்தப் படம்தான் தமிழில் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படமாக ரீமேக் ஆனது.
சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்துள்ளன. இருவரும் ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்களும் கூட வெளியாகின. இரு தினங்களுக்கு முன்பு சர்வானந்த் திருமணத்தில் கூட சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி கலந்து கொண்டனர். அவர்கள் இணைந்து நடித்த 'மஹா சமுத்திரம்' படத்திலிருந்துதான் சித்தார்த், அதிதி இடையே காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
44 வயதான சித்தார்த் இதற்கு முன்பு திருமணமாகி விவாகரத்தானவர். அதன்பின் சில வருடங்களுக்கு முன்பு அவரும், நடிகை சமந்தாவும் காதலிப்பதாகச் செய்திகள் வந்தன. இருவரும் காளஹஸ்தி கோயிலுக்குக் கூட சென்று பூஜை செய்தார்கள். அதன்பின் திடீரெனப் பிரிந்தார்கள். பின்னர் சமந்தா, நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு, பிரிந்தும் விட்டார்.
சித்தார்த் நடித்து இந்த வாரம் 'டக்கர்' படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் அப்படத்திற்காக நிறைய புரமோஷன்களைச் செய்து வருகிறார் சித்தார்த். அப்போது அவரிடம் அதிதி பற்றிய கேள்விக்கு, ''சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று பதிலளித்துள்ளார்.