‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"ஆரோகணம்" படத்தில் விஜியின் மகளாக நடித்த பெண்ணை நினைவிருக்கிறதா? அவர் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். படத்தின் பெயர் "சிஎஸ்கே" அதாவது "சார்லஸ் ஷாபிக் கார்த்திகா". இனிது இனிது படத்தில் நடித்த சரண்குமார், நாராயண், விமல் ஆகியோர் ஹீரோ. குஹேனி ஹீரோயின். இந்த மூன்று பேருக்கும் இடையிலான காதல் கலாட்டாதான் படத்தின் கதை. கே.வி.குகன், மற்றும் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக இருந்த எஸ்.சத்யமூர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி நடந்து வருகிறது.
"பள்ளியில் படிக்கும்போதே நடிக்கும் ஆசை இருந்தது. ஆரோகணம் படத்துக்கு லட்சுமி மேடம் மகள் கேரக்டருக்கு ஆள் தேடியபோது நானே சென்று ஆடிஷனில் கலந்து கொண்டு செலக்ட் ஆனேன். அப்போ ரொம்ப சின்ன பெண்ணாக இருந்ததால் அந்த கேரக்டரில் நடித்தேன். என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். இப்போது ஹீரோயினாக அறிமுகமாகிறேன். எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க கூடிய ஒரு ஹீரோயினாக வளர வேண்டும் என்பதே ஆசை" என்கிறார் குஹேனி.