‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா தான் மீண்டும் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பிரியா பவானி சங்கரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் மூன்றாம் தட்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் , தற்போது ராகவா லாரன்ஸ், சிம்பு என முன்னேறி வந்திருப்பவர், அடுத்தப்படியாக விஜய்யுடன் நடிப்பது உறுதி ஆகிவிட்டால் முன்னணி நடிகை பட்டியலில் இணைந்து விடுவார் .