நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234 வது படம் குறித்து ஒரு தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அதோடு இப்படத்தில் ஹிந்தி நடிகை வித்யா பாலன் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் நயன்தாரா அல்லது திரிஷா ஆகிய இருவரில் ஒருவர் இன்னொரு நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஏ. ஆர் .ரகுமான் இசையமைக்கிறார்.