பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கியதிலிருந்து தனக்கு அவ்வப்போது விக்ரம் டிப்ஸ் கொடுத்து வருவதாக கூறி வரும் மாளவிகா மோகனன், தற்போது இப்படம் குறித்த இன்னொரு முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இதுவரை நான் நடித்ததில் இந்த படம் ஒரு முக்கியமான படம். இந்த படத்திற்காக மிக கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக எனது கதாபாத்திரத்திற்கு தேவையான சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஜேம்ப்ஸ், ரோலிங், கிக்ஸ் என பல கலைகள் பயிற்சி எடுத்தேன். பீரியட் கதையில் உருவாகும் இந்த படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சியும் உள்ளது. அதனால் தங்கலான் படம் தமிழ் திரையுலகில் எனக்கு ஒரு திருப்புமுனை கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் மாளவிகா.