'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. தற்போது படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது தம்பி அபிராம் முதன்முதலாக அஹிம்சா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. அதேபோல தெலுங்கு திரையுலகின் இன்னொரு இளம் நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவரின் தம்பி பெல்லம்கொண்டா கணேஷ் நடித்துள்ள நேனு ஸ்டுடென்ட் சார் என்கிற படமும் வெளியாக இருக்கிறது.
இரண்டு நடிகர்களின் சகோதரர்கள் மோதிக்கொள்ளும் போட்டியாக மட்டும் இது இருந்திருந்தால் இதுபற்றி யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் மூன்றாவதாக பரேசன் என்கிற ஒரு படமும் இதே தேதியில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் ரூபக் ரெனால்ட்சன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்படத்தை நடிகர் ராணா தான் தனது நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார்.
தனது தம்பி நடித்துள்ள அறிமுகப்படம் வெளியாகும் அதேநாளில் இப்படி வேறொரு படத்தை தன் சொந்த நிறுவனம் மூலமாக ராணா ரிலீஸ் செய்வது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வாரம் கழித்தாவது ராணா அந்த படத்தை ரிலீஸ் செய்யலாமே, எதற்காக போட்டிக்கு ரிலீஸ் செய்வது போல செய்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.