மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் படங்களில் தூள் கிளப்பியவர் விஜயகாந்த். அரசியலிலும் ஒரு ரவுண்ட் வந்தவர் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். உடல்நல பிரச்னையால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவரது மகன் சண்முக பாண்டியன் 2015ல் சகாப்தம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன்பின் 2018ல் மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார். பிறகு வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருவதோடு உடலையும் பிட்டாக மாற்றி உள்ளார். சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரை படத்தில் இவர் நடிக்க உள்ளார். இது படமாகவோ அல்லது வெப்சீரிஸாகவோ எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே வால்டர் படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டின் ஒரு படத்தில் நடிக்க போகிறார். கன்னடத்தில் வெற்றி பெற்ற கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மண்சார்ந்த கதையாக வெளியான ‛காந்தாரா' பட ஸ்டைலில் இந்தப்படம் உருவாக உள்ளதாம்.
இந்த படத்தின் கதையை விஜயகாந்த் குடும்பத்தினர் கேட்டதுமே பிடித்து போய்விட்டதாம். எதற்கும் ஒரு டெஸ்ட் ஷூட் எடுத்து பார்க்கலாம் என்று எடுத்துள்ளனர். மிகவும் அருமையாக வந்துள்ளதாம். சின்ன வயதில் விஜயகாந்த்தை பார்த்தது போன்றும் இருந்துள்ளது. தமிழில் இப்படி ஒரு கதை கொண்ட படம் இதுவரை வந்ததில்லை, நிச்சயம் படம் வெளியான பின் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என விஜயகாந்த் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதோடு சண்முக பாண்டியனுக்கு இந்தப்படம் உரிய அங்கீகாரத்தை பெற்று தரும் என்கிறார்கள். விரைவில் முறையான அறிவிப்பும், அதைத்தொடர்ந்து படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.