புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழில் 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமாகி சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், பாசக்கிளிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா, திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். தற்போது 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் நவ்யா பங்கேற்று வந்தார். கோழிகோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. புரமோசன் பணிகளால் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான உணவு அருந்தியதால் அவருக்கு புட் பாய்சன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. நவ்யா பூரண நலத்துடன் திரும்பி வரும் வரை புரமோசன் பணிகளை நிறுத்தி வைப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.