தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்தார். ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களையும், இதர பாரம்பரிய கலாசார மற்றும் மத சின்னங்களை பார்வையிடவும் இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினியின் வருகை இந்தியா, இலங்கை இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி, திரைப்பட வளர்ச்சி ஆகியவற்றுக்கு அது உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். ரஜினியை இலங்கை தூதர் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு விருந்தினராக அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.




