Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 குழந்தைகளை பெற்றுவிட்டு ஹீரோயின் ஆகியிருக்கிறேன் : ராஜலட்சுமி நெகிழ்சி

30 மே, 2023 - 12:44 IST
எழுத்தின் அளவு:
I-have-become-a-heroine-after-having-2-children-:-Rajalakshmi

பிரபல நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி 'லைசென்ஸ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். 32 வயதில் 2 குழந்தைகளை பெற்றுவிட்டு ஹீரோயின் ஆகியிருக்கிறேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜே.ஆர்.ஜே புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரித்துள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார். இதற்கு முன்பு சில பாடல் ஆல்பங்களில் ஆடியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜலட்சுமி நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை.

இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்த நம்பிக்கையை கண்டு வியந்து போனேன். 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'வீரன்' மண் சார்ந்த சூப்பர் மேன் : ஆதி'வீரன்' மண் சார்ந்த சூப்பர் மேன் : ... ரஜினிக்கு இலங்கை அழைப்பு ரஜினிக்கு இலங்கை அழைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
01 ஜூன், 2023 - 07:34 Report Abuse
Mani . V நெகிழ்ச்சி ஆகி? இயக்குனரும், தயாரிப்பாளரும் "ஏதோ ஆசையில்" இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் ஹீரோயின் வேடம் கொடுத்துள்ளார்கள். இனி செந்தில் கணேஷ்தான் வேறு துணை தேடணும். (நல்லா இருந்த குடும்பத்தை கும்மி அடித்து விட்டார்கள்)
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
31 மே, 2023 - 11:19 Report Abuse
vadivelu வாழ்த்துக்கள் ஆனால் ஒன்று நாலு காசு பார்த்தவுடன் அரசியல் பேச ஆரம்பிக்காதீர்கள். உங்களை சுற்றி அந்நியர்கள் வல போட்டு விடுவார்கள், கவனமாக இருங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in