அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐ.ஐ.எப்.ஏ) விருது நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற்றது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்கினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஐ.ஐ.எப்.ஏ சார்பில் ‛வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த விருதை கமல்ஹாசனுக்கு வழங்கினார். அப்போது சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி கமல்ஹாசனை உற்சாகமூட்டினர்.