'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
உலக அழகி பட்டம் பெற்று பின்னர் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த 20 வருடங்களில் தற்போதும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் முன்னணி இடத்தில் தான் இருக்கிறார். அவ்வப்போது பாலிவுட் சினிமா குறித்தும், சில நேரங்களில் தான் கடந்து வந்த பாதை குறித்தும் தனது பேட்டிகளில் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அப்படி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இரண்டு நாட்கள் நடித்த பின்னர் வேண்டாம் என்று உதறிவிட்டு வந்ததாக கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
இது குறித்து அவர் கூறும்போது, “இது நான் சினிமாவில் நுழைந்த புதிதில் பாலிவுட்டில் என்னை தேடி வந்த படம். இதில் எனக்கு உளவாளி கதாபாத்திரம் என்பதால் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியின்போது எதிர்தரப்பு இளைஞன் ஒருவனை கவர்ச்சியால் உணர்ச்சியை தூண்டி மயக்கும் விதமாக காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் நான் ஒரு ஆடையை களைய வேண்டும். ஆனால் என்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் அந்தப் படத்தின் இயக்குநர் என்னை உள்ளாடையில் பார்க்க வேண்டும்; இல்லையென்றால் ஏன் மக்கள் இந்தப் படத்தை வந்து பார்க்கப் போகிறார்கள்? என கேட்டார். மனிதத்தன்மையற்ற ஒரு தருணமாக இருந்தது. அன்றே அந்த படத்தில் இருந்து வெளியேறி கிளம்பி விட்டேன். இந்த தகவலை கேள்விப்பட்ட என் தந்தை இரண்டு நாட்கள் என்னால் அவர்களுக்கு என்ன நஷ்டமானதோ அந்த தொகையை திருப்பிக்கொடுத்து விடு என்று சொன்னதால் அந்தத் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.