என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு.  இந்த படத்தை துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்  என்ற படத்தை இயக்கிய தேசிங்கு  பெரியசாமி இயக்குகிறார். சரித்திர கால கதையில் தயாராகும் இப்படத்தில் போர் வீரராக நடிக்கும் சிம்பு அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது கதாபாத்திரத்திற்காக நீண்ட தலை முடியையும் வளர்த்து வருகிறார். 
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிம்புவின் 48வது படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிப்பதாக  கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையான இவர் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
           
             
           
             
           
             
           
            