ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் டேவிட் வார்னர். சமீப வருடங்களாக இந்திய சினிமாவை பெரிய அளவில் விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தெலுங்கு திரையுலகம் பக்கம் இவரது கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து ஆடிய புட்டபொம்மா பாடலுக்கு தானும் அது போல நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு வைரல் ஆக்கினார். இந்த நிலையில் சமீபத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டபோது இந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் டேவிட் வார்னர்.
மேலும் அந்த படத்தில் மகேஷ்பாபு அல்லது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வேண்டும், இந்தப் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். காரணம் அது என்னுடைய இயற்கை குணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் எனக்கு மூன்றே மூன்று ஹிந்தி பாடல்கள் தான் தெரியும் என்றும் அந்த சமயத்தில் தான் ஐதராபாத்தை சேர்ந்த சில ரசிகர்கள் புட்டபொம்மா பாடலுக்கு ஆட முடியுமா என்று கேட்டனர் என்றும் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தப் பாடலுக்கு ஆடி வீடியோ வெளியிட்டேன் என்றும் கூறியுள்ளார்.