விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த வாரம் அவரது நண்பரான பர்ஹான் பின் லியாகத் என்பவருக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இன்ஸ்டாகிராம் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதன்பிறகு அவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலன் என இணையதளங்களிலும், யு டியுப் தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இணையதளத்தின் செய்தியைப் பகிர்ந்து அதற்கு பதிலளித்துள்ளார்.
“ஹஹஹஹா இந்த நேரத்தில் எனது அன்பான நண்பரை இழுக்க வேண்டியதில்லை. உண்மையான மர்ம மனிதரை நான் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்துவேன். அதுவரை “சில் பில்” ஆக இருங்கள். குறிப்பு - ஒரு முறை கூட சரியாக வரவில்லையா,” என கிண்டலடித்து பதிலளித்துள்ளார்.
ஆங்கில இணையதளம் 'மர்ம மனிதர்' என்ற அர்த்தத்தில் 'மிஸ்டரி மேன்' என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தது. அதற்குத்தான் கீர்த்தி சுரேஷ் மேலே சொன்னபடி தன்னுடைய பதிலைப் பதிவு செய்துள்ளார்.