ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் | ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் | தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை? |
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வம்சம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. அதற்குப் பிறகு கதையம்சம் உள்ள பத்துப் பதினைந்து படங்களில் அவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் இன்னும் முக்கிய இடத்தைப் பிடிக்காமல் இருக்கிறார். அவர் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களும் மாறுபட்டதாக இருக்கும் என பெயர் பெற்றவர்.
கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'டி பிளாக், தேஜாவு, டைரி' ஆகியவை விமர்சன ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வசூலைக் கடக்கவில்லை. இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த 'திருவின் குரல்' படத்திலும் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை.அப்படம் வெளிவந்த ஒரு மாதத்திலேயே அவர் நடித்துள்ள அடுத்த படமான 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இந்த வாரம் மே 26ம் தேதி வெளியாக உள்ளது.
மூன்று தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் யு டியுப் தளத்தில் வெளியானது. இரண்டு நாட்களிலேயே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு அருள்நிதி நடித்து வெளிவந்த 'டி பிளாக்' படத்தின் டிரைலர் 50 லட்சம் பார்வைகளைக் கடந்தது. அதற்குப் பிறகு இப்படத்தின் டிரைலர்தான் அந்த அளவு பார்வைகளைக் கடந்துள்ளது.
ஜோதிகா நடித்த 'ராட்சசி' படத்தை இயக்கிய சை கௌதம் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அருள்நிதி நடித்து வெளிவந்த 'மௌன குரு, டிமாண்டி காலனி' படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேருமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.