கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் அவரது சினிமா கேரியர் இன்னும் உயர்ந்துள்ளது. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது தவிர்த்து ‛தி ரோட்' என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதையடுத்து தூங்கா நகரம், சிகரம் தொடு போன்ற படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மற்ற மொழிகளில் உள்ள நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.