கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில்லிருந்து தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பு அறிவித்தனர். அந்த தீர்ப்பின் படி , ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர் . இந்த தீர்ப்பை அறிவித்த பின்னர் பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் நன்றி தெரிவித்து வந்தனர்.
இவர்களை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு, "நமது தமிழ் கலாச்சாரத்திற்கும், கன்னட கம்பாள கலாச்சாரத்திற்கும் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்து மதிப்பிற்குரிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியும் பெருமையையும் அடைகின்றேன். இரு மாநில அரசிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தொடர்ந்து போராடிய அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்" என இவ்வாறு பகிர்ந்துள்ளார்.