அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
பிசாசு -2 படத்தை கடைசியாக இயக்கி உள்ள மிஷ்கின், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த போது அவர் வளர்ந்து வரும் ஒரு ஸ்டார் நடிகராக இருந்தார். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடிப்பதற்காக நான் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போது என்னை கட்டி தழுவி வரவேற்றார் விஜய். அப்போது நான் அவரை ஒரு நட்சத்திரத்தை போல் பார்க்கவில்லை. குழந்தையாகவே பார்த்தேன். அந்த அளவுக்கு என்னை பார்த்ததும் மென்மையாக சிரித்தார். அவரிடத்தில் தான் ஒரு உச்ச நட்சத்திரம் என்று எந்த எண்ணமும் இல்லை. தன்னை ஒரு சாதாரண நடிகராகவே அவர் நினைத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.
மேலும், தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், அந்தப் படம் தான் ரஜினியின் கடைசி படம் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும். இதுவே ரஜினியின் கடைசி படம் என்று இதுவரை வெளியாகி வந்த தகவல்கள் தற்போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.