பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு |

கடந்த மார்ச் 31ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சேத்தன், கவுதம் மேனன், நாயகி பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் தங்களது நடிப்புக்காக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றனர். ரிலீஸான சமயத்திலேயே தமிழ்நாட்டையும் தாண்டி இந்த படம் மற்ற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் இந்த படத்தில் ஆயுதப்படை கான்ஸ்டபிள்களில் ஒருவராக நடித்திருந்த கன்னட நடிகர் சர்தார் சத்யா என்கிற எஸ் சத்யா என்பவர் இந்த படம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதை தொடர்ந்து தனக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
“கடந்த 2007ல் இருந்து கன்னட சினிமாவில் பயணித்து வந்தாலும் இதுவரை தான் கற்றுக் கொண்ட விஷயங்களில் இருந்து முற்றிலும் மாறாக வெற்றிமாறனிடம் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.. சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை விடுதலை படத்தில் நடித்த பிறகு தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்” என்று சிலாகித்து கூறியுள்ளார் நடிகர் எஸ் சத்யா