நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தொழிலதிபரான வருண் மணியன் என்பவரைக் காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் 2015ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை செல்லாமல் இருவரும் திடீரெனப் பிரிந்தார்கள். அதன்பின் வருண் மணியன், நடிகை பிந்து மாதவி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் வெளிவந்தன. அதனால், இருவரும் காதலிக்கிறார்களா என்ற கிசுகிசுவும் வந்தது.
எப்போதோ நடந்த அந்த விஷயம் பற்றி ஐதராபாத்தில் நடந்த 'நியூசென்ஸ்' என்ற வெப்சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பிந்து மாதவியிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிந்து மாதவி, “அது உண்மைதான். ஆனால், இரண்டும் வெவ்வேறு காலத்தில் நடந்தது, ஒரே சமயத்தில் நடந்ததல்ல,” என்றார். நிகழ்ச்சி தொகுப்பாளர், “த்ரிஷா பிரிந்த பிறகு நீங்கள் 'டேட்டிங்' செய்தீர்களா என்றதற்கு 'ஆமாம்' என பதிலளித்தார் பிந்து மாதவி.
'நியூசென்ஸ்' என்ற இந்த தெலுங்கு வெப்சீரிஸ், 20 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின், மதனபள்ளியில் நடப்பதாக க்ரைம், அரசியல், பத்திரிகைத் துறை கலந்த தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. மே 12ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.