ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛பொன்னியின் செல்வன் 2'. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, ரகுமான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முதல்பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இரண்டு பாகங்களுக்கும் நடிகர் கமல்ஹாசன் படத்தின் ஆரம்பத்தில் குரல் கொடுத்து இருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் கமலுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அவருடன் மணிரத்னம், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோரும் படம் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‛‛நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படியொரு ஆசையாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. இதை நான் ஒரு படமாக காவியமாக பார்க்கிறேன். படத்தை பற்றி நிறைய மாற்று கருத்துகள் இருந்தாலும் மக்கள் ஆதரிக்கிறார்கள். தமிழ் சினிமா, தமிழரின் பெருமையை போற்றும் இந்த படத்தை எடுக்கவே தனி துணிச்சல் வேண்டும். அதை செய்து முடித்திருக்கும் வீரன் மணிரத்னம். அவருக்கு துணையாக தோள் கொடுத்து, வாள் கொடுத்து நட்சத்திர பாட்டாள படை உதவி உள்ளது. இதுபோன்று நிறைய நட்சத்திரங்களை ஒன்றுகூடி பார்த்து நீண்டகாலமாகிவிட்டது. நல்ல பொற்காலம் துவங்கியதாக நினைக்கிறேன். போற்றப்பட வேண்டிய வெற்றி இது'' என்றார்.




