மீண்டும் போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் | பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற ரம்யா பாண்டியன் | லியோ ‛படாஸ்' பாடலுக்கு வரவேற்பு எப்படி? | சந்திரமுகி 2 ரிலீஸ் : பழனி கோயிலில் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் | டிசம்பர் 22ல் 'சலார்' ரிலீஸ்… - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காவிரி எங்களுடையதே... - பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம் | பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! |
நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். சில ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்ற தொழில் அதிபரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமும் விவாகரத்து பெற்றார்.
இதை தொடர்ந்து யுட்யூப் சேனல் தொடங்கிய வனிதா, அந்த சேனலுக்கு விஷூவல் எடிட்டராக வந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக பல பிரச்சனைகள் எழுந்தது.
இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பீட்டர் பால் காலமானார். இதுதொடர்பான செய்திகள் வெளியானது. அதில் வனிதாவின் கணவர் என பீட்டர் பால் என அனைவரும் குறிப்பிட்டனர். பீட்டர் பால் மறைவுக்கு அவர் பெயரை குறிப்பிடாமல் இரங்கல் தெரிவித்தார் வனிதா.
இந்த நிலையில் வனிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்துவிட்டது. நாங்கள் பிரிந்துவிட்டோம். நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.