20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

ஆர்.ஆர்.ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி. இந்த நிலையில் மஹேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டரில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய புகைப்படங்களை பதிவிட்டு, வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் கற்பனையை தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை என்று குறிப்பிட்டு இருப்பவர், இது போன்ற பழங்கால நாகரிகத்தைப் பற்றி இயக்குனர் ராஜமவுலி படம் எடுத்தால் உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு ராஜமவுலி அவருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில், தோலாவிராயில் மகதீரா படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது பழமையான ஒரு மரத்தை பார்த்தேன். அது சிதைந்து போய் இருந்தது. அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும் படியான ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற போது மொகஞ்சதாரோவிற்கு செல்ல மிகவும் முயற்சி எடுத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி.
அதோடு கடந்த 2018ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக தான் பாகிஸ்தான் சென்றபோது, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்த்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு அது குறித்த சில ஆச்சரிய தகவல்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.




