சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு உடன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ரஹ்மான் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். சாய்ரா பானுவும் மேடைக்கு வந்தார். ஏ.ஆர். ரஹ்மான், ‛‛தனது பேட்டிகளை மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்'' என கூறினார்.
அவரை தொடர்ந்து சாய்ரா பானு மேடையில் ஹிந்தியில் பேச தொடங்கினார். அப்போது மனைவியிடம், ஹிந்திக்கு பதிலாக தமிழில் பேசும்படி ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். இதை கேட்ட அங்கிருந்த ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்கள் எழுந்தது. அதற்கு அவரது மனைவி, மன்னிக்கவும், எனக்கு தமிழில் வேகமாக பேச வராது. அதனால் தான் ஹிந்தியில் பேசினேன். மன்னித்து விடுங்கள்'' என்று கூறினார்.