அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை ஆரம்பித்து விட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள பொகாரா என்ற நகரத்தில் அஜித் குமார் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதோடு அங்குள்ள தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற காலதாமதம் ஆகும் என்கிறார்கள். தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி, அஜித் படத்திற்காக கதை திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.