ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
மலையாளத்தில் நேரம், பிரேமம் எனது இரண்டு படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. இதற்கிடையே கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது.
இந்த நிலையில் அடுத்ததாக தமிழில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இவர் தனது மூன்று படங்களிலும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் என்பவருடன் தான் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்ரன் அவ்வப்போது இளையராஜாவின் இசை குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடவும் தவறுவதில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் இளையராஜாவை சந்தித்ததாக கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், ஏற்கனவே இரண்டு முறை அவரை சந்தித்தபோது புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறியதால் இந்த முறை மறக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறி அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில். வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது, தான் பணியாற்றி வரும் படத்தை முடித்தபின் அதற்கு அடுத்த படத்தில் நிச்சயமாக இளையராஜாவின் இசையில் இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.