அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி |

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து பொன்னின் செல்வன் படக்குழுவினர் சென்னையில் இருந்து துவங்கி ஐதராபாத், மும்பை, டில்லி என முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு சமீபத்தில் கேரளாவிற்கும் வருகை தந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகர் டொவினோ தாமஸ் இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விக்ரமை சந்தித்து சில நிமிடங்கள் ஒரு ரசிகராகவே மாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.
விக்ரமுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள டொவினோ தாமஸ், அவருடனான சந்திப்பு குறித்து கூறும்போது, “விக்ரம் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவரது அந்நியன் படத்தை பலமுறை பார்த்துள்ளேன். அதேபோல சினிமாவிற்கு வந்த பிறகு வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததிலும், ஏற்ற இறக்கங்களை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தபோதிலும், எப்போதுமே விக்ரம் என் மனதில் இருந்துள்ளார். ஒரு ரசிகனாக அவரை நேரில் சந்தித்து, சில நிமிடங்கள் அவர் அருகில் அமர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார்.