'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்- 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் கேன் சேஞ்சர் ஆகிய படங்களை ஒரேநேரத்தில் மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர். இருதினங்களுக்கு முன்னர் தான் இந்தியன் 2 படத்தின் தென்னாப்பிரிக்கா படப்பிடிப்பை முடித்தார் ஷங்கர். இதையடுத்து மீண்டும் கேம் சேஞ்சர் படத்திற்கு வந்துள்ளார். இந்தப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியை ஏப்ரல் 24ம் தேதி படமாக்க திட்டப்பட்டுள்ளார் ஷங்கர். ராம்சரனுடன் 1000 ஸ்டன்ட் கலைஞர்கள் மோதும் இந்த பிரம்மாண்ட சண்டை காட்சியை அன்பறிவ் மாஸ்டர்கள் படமாக்குகிறார்கள். இதற்காக போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் தற்போது ரிகர்சல் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் ராம்சரண், கியாரா அத்வானியுடன் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ். ஜே .சூர்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.