சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மீடியாவில் அடியெடுத்து வைத்து, செய்தி வாசிப்பாளராக மாறி, சின்னத்திரை தொடரில் நடிகையாக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி ஷங்கர். இவரது நடித்தில் ‛ருத்ரன்' திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தொகுப்பாளராக இருந்தபோது இயக்குநர் கவுதம் மேனனை பேட்டி எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில், ‛‛இந்த வீடியோ பழைய நினைவுகளை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ரொம்ப ஸ்பெஷல். யார் இதனை வெளியிட்டார்களோ அவர்களுக்கு நன்றி. எனது சுவாரசியமான பயணத்தை உணர முடிகிறது. உங்கள் உடலையும் உங்கள் தோற்றத்தையும் வைத்து சிலர் உங்களை காயப்படுத்துவார்கள். நீங்கள் யார் என்பதையும் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதையும் மற்றவர்களை பேச, முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.
இதுதான் அழகு என்ற எந்த வரையறையும் இல்லை. ஸ்கின் கேர், வாழ்க்கை முறை என நடிகர்கள் நிறைய செலவிடுவார்கள். ஆனால் சாதாரண கல்லூரி மாணவியால் அதெல்லாம் செய்ய முடியாது. அதனால் உங்களிடம் நல்ல தோற்றமும், உடல்வாகும், தோல் நிறமும் இல்லையென்றால் பரவாயில்லை. இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்து முடிவுக்கு வராதீர்கள். இன்று நான் தயாராக எனக்கு 10 பேர் கொண்ட குழு இருக்கிறார்கள். அழகுக்கு இதுதான் வரையறை என்று எதுவும் இல்லை. நிச்சயம் அது இலக்கு இல்லை. அது ஒரு வேலை. அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.
காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். காசு தானா தேடி வராது. நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு விரும்புவதை பெற வேண்டும். உங்களுக்கு அது கிடைக்கும்போது அதனை வைத்து நீங்கள் செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள். கலர் ஆகனும் என்று எந்த அவசியமும் இல்லை. ராஜவேல் ஐ லவ் யூ. நீ அப்போது எப்படி பார்த்தாயோ, அப்படியே தான் இப்பொழுதும் பார்க்கிறாய் நன்றி. நீங்கள் இதுபோன்ற நபரை கண்டுபிடித்தால் விட்டுவிடாதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.