'கங்குவா' படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு | புஷ்பா -2 ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமா? | குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் சமந்தா! | பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணைந்த ஜார்ஜ் மரியன், இந்துமதி மணிகண்டன்! | சித்தார்த்தின் 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியானது! | 'பழைய சம்பளம்' வாங்கிய படத்திற்கு மீண்டும் வந்த கவின் | ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | நேருக்கு நேர் மோதும் அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் | 250 கோடி வசூலைக் கடந்த 'அமரன்' : 2024 படங்களில் 2வது இடம் | 'கங்குவா' சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி |
மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாதவன் நடித்தபோது அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. அதன் பிறகு சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் நாயகனாக நடித்தார் மாதவன். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாகவே நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மாதவனுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா. அது குறித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் அவர், மாதவனுக்கு வங்கை அன்னம், சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் போன்ற உணவு வகைகளை தான் பரிமாறியதாக தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் இந்த விருந்துக்கு டுவிட்டர் பக்கத்தில் மாதவன் சுதாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நீங்கள் ஒரு அசாதாரணமான இயக்குனர் மட்டுமின்றி அசாதாரணமாக சமைத்து அசத்துபவர் என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்களது அழகான இல்லத்தில் எனக்கு நீங்கள் உணவு பரிமாறியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சுதா என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.