எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

உலக அளவிலான சினிமா விருதுகளில் அதிக மதிப்புடையதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
விருதுக்கு முன்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வாகியுள்ள 'நாமினீஸ்' அனைவரும் கலந்து கொள்ளும் 'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' நிகழ்ச்சி நேற்று இரவு கலிபோர்னியா, பெவர்லி ஹில்ஸ், த பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் டாம் க்ரூஸ், ஹாங் சாவ், ஆஸ்டின் பட்லர், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், மைக்கேல் வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அடுத்த மாதம் மார்ச் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடம் எழுந்துள்ளது.