175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மாளவிகா அவினாஷ், தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதேபோல சின்னத்திரையிலும் 28 வருடங்களாக மோஸ்ட் வாண்டட் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், மாளவிகா திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டிருந்த மாளவிகா, மருத்துவமனையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, 'ஒற்றை தலைவலி தானே என்று அஜாக்ரதையாக இருக்காதீர்கள். பாரம்பரிய மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுக்க வேண்டாம். சாதாரண தலைவலியாக இல்லாமல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சிக்கலாக இருக்கலாம்' என்று அதில் கூறியிருந்தார்.
மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது முகமே ஒரு பகுதி முழுவதும் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். எனவே, அவருக்கு வேறு எதுவும் பெரிய பிரச்னையா என பலரும் பயத்துடன் கேட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தற்போது உடல்நிலை பரவாயில்லை. எனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் எனது நன்றி' என பதிவிட்டுள்ளார்.