''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் 1988ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளிவந்த படம் 'அக்னி நட்சத்திரம்'. அப்படம் வெளிவந்து இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
70களில் பிறந்தவர்களுக்கு, அந்தப் படம் வெளிவந்த போது இளைஞர்களாக இருந்தவர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்த படம். ஒரே அப்பா, வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளான பிரபு, கார்த்திக் இருவர் இடையிலான மோதல் ஒரு பக்கம், இருவரது காதலும் மற்றொரு பக்கம் என காதலும், மோதலும் கலந்த ஒரு ஆக்ஷன் படமாக வெளிவந்த படம்.
மணிரத்னத்தின் கதாபாத்திர உருவாக்கம், நட்சத்திரங்களை நடிக்க வைத்த விதம், இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட், பி.சி.ஸ்ரீராமின் 'பேக் லைட்' எபெக்டில் வித்தியாசமாய் ஒளிர்ந்த காட்சிகள் என படம் பற்றி அப்போது பேசாதவர்களே கிடையாது. அப்போதெல்லாம் சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் டைம் லைனில் அக்கு வேறு ஆணி வேராக படம் பற்றிய கருத்துக்களே நிறைந்திருக்கும்.
அப்படி ஒரு 'யூத் புல் என்டர்டெயினர்' படம் கடந்த 35 வருடங்களாக வரவேயில்லை என்று அடித்துச் சொல்லலாம்.