ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் | பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு | பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு |

மலையாளத்தில் விருதுகளுக்கு அனுப்பி போட்டியிடும் விதமான படங்களாகவே தொடர்ந்து இயக்கி வருபவர் நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ்.. தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், நளதமயந்தி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்திருந்தார். ஏற்கனவே லயர் டயஸ் என்கிற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நிவின்பாலி நடிப்பில் மூத்தோன் என்கிற படத்தை இந்தி மற்றும் மலையாளத்தில் இயக்கினார்.
இந்தநிலையில் அடுத்ததாக இவர் கேஜிஎப் நாயகன் யஷ்ஷை வைத்து படம் இயக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யஷ்ஷிடம் ஒரு அருமையான கதையை சொல்லி கீது மோகன்தாஸ் அவரை இம்ப்ரெஸ் பண்ணிவிட்டார் என்றும் யஷ்ஷும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்றும் விரைவில் இந்தப்படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.