ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேப்டன் மார்வெல்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது 'தி மார்வெலர்ஸ்'. இந்த படத்தில் 3 சூப்பர் ஹீரோயின்கள் இணைந்திருக்கிறார்கள்.
'கேப்டன் மார்வெல்' படத்தில் நடித்த ப்ரி லார்சன், சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான 'மிஸ்.மார்வெல்' வெப்சீரிஸில் இடம்பெற்றிருந்த கமலா கானும், 'வாண்டாவிஷன்' தொடரின் சூப்பர் ஹீரோயின் மோனிகா ராம்போவும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ப்ரி லார்சன் தவிர டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி,, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். நியா டகோஸ்டா இயக்கி உள்ளார்.
இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலில் வெளியாகிறது. தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்திய வருடங்களாக மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு வரவேற்பு குறைந்து வரும் நிலையில் 3 சூப்பர் ஹீரோயின்களை ஒரே படத்தில் களம் இறக்கி உள்ளது மார்வெல் நிறுவனம்.