ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி | செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம் | 3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் 'ஜனநாயகன்' ? |

முன்னணி மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜான், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் கதை மற்றும் பின்னணி குறித்து தகல்கள் எதுவும் வெளிவரவில்லை. என்றாலும் படத்தின் தலைப்பை வைத்து இது ஒரு சரித்திர படமாக இருக்கலாம் என்பதை கணிக்க முடிந்தது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் முதல் பார்வை அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது.
டைட்டிலில் இடம்பெற்றுள்ள அரச முத்திரை டிசைன், மோகன்லால் அணிந்துள்ள உடை சரித்திர படத்திற்கான அடையாளமாக உள்ளது. மன்னர்கள் கால கதையாக இருக்கலாம். அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வீரனின் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
படத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வரும் முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது. பி. எஸ்.ரபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.




