நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? |
அழகி போட்டிகளில் டைட்டில் வென்ற ஷாலி நிவேகாஸ் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். பின்னர் விளம்பர படங்களிலும், குறும்படங்களிலும் நடித்தவர் சமீபத்தில வெளிவந்த 'செங்களம்' வெப் தொடரில், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவை நினைவுபடுத்தும் நாச்சியார் என்ற கேரக்டரில் நடித்த பிரபலமானார். தற்போது அவர் 'பேரன்பும் பெருங்கோபமும்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் 3 கால கட்ட கதையில் 3 விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.
துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா உதவியாளர் சிவபிரகாஷ் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சிவபிரகாஷ் கூறியதாவது: சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன். வெறும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த படம். 1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. என்றார்.