'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்ததாக, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். புராண கால கதையான சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பிரபல தெலுங்கு கமர்ஷியல் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.
அப்படி ஒரு நிகழ்வில் சமீபத்தில் அவர் பேசும்போது,”இந்த படத்திற்காக தினசரி எனது கைகளில் மலர்களை சுற்றியவாறு நடிக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்த அன்று மாலையே என்னுடைய கைகளில் அந்த பூக்களின் தடம் அச்சாக பதிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எனது கைகளில் இந்த பூக்களின் அச்சுப்பதிவு இருந்தது. ஒருவேளை இது நிரந்தரமாக போகவே போகாதோ என்று கூட நான் நினைத்தேன். அதேசமயம் மேக்கப்பில் அவற்றை சரி செய்து நடித்து வந்தேன். ஆனால் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அது மறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் சமந்தா.