காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழில் பிரபல இயக்குனரான சிவா, இயக்குனர் ஆவதற்கு முன்பே கதாநாயகனாக அறிமுகமானவர் அவரது தம்பி நடிகர் பாலா. அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாலா, மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவரது முதல் மனைவி அம்ருதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா.
இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சைக்கு முன்னர் ஒரு வீடியோ மூலமாக பேசிய பாலா, இந்த அறுவை சிகிச்சை ரிஸ்க் ஆனது என்றும், ஒருவேளை இந்த சிகிச்சை முடிந்த பின் தான் உயிர் பிழைக்கக்கூட வாய்ப்புகள் குறைவு என்றும் உருக்கமாக பேசியிருந்தார்.
சமீபத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்தபடியே தனது மனைவி எலிசபெத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் பாலா.