'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
காமெடி நடிகரான சூரியை தனது விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன். அந்தப் படம் சூரிக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனால் தற்போது அவரை அடுத்தடுத்து பல இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களில் நடிப்பவர், அதையடுத்து விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் சூரி. இது தவிர மற்றொரு படத்தில் அவர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சூரியை தேடி மேலும் சில இயக்குனர்களும் கதை சொல்லி வருகிறார்கள். அதனால் தற்போது பிஸியான ஹீரோவாகி விட்டார் சூரி.